×

தொடரும் அட்டூழியம்!: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி குமரி மீனவர்கள் 25 பேரை சிறைபிடித்தது செஷல்ஸ் நாட்டு கடற்படை..!!

செஷல்ஸ்: கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த மீனவர்களை செஷல்ஸ் நாட்டு கடற்படையினர் மீண்டும் சிறைபிடித்தனர். எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி 19 தமிழக மீனவர்கள், 6 வடமாநில மீனவர்கள் உள்ளிட்ட 25 பேரை செஷல்ஸ் நாட்டு கடற்படை கைது செய்துள்ளது. குமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மீனவர்கள் வெளிமாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் தங்கி மீன்பிடி தொழில் செய்து வருகிறார்கள். கடந்த 7ம் தேதி கொச்சி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற சின்னத்துரை, பூத்துறை பகுதிகளை சேர்ந்த 33 மீனவர்களை எல்லை தாண்டி மீண்டுபிடித்ததாக கூறி செஷல்ஸ் நாட்டு கடற்படை சிறை பிடித்திருந்தது.

இந்நிலையில் தற்போது மீண்டும் 2 படகுகள் மற்றும் 25 மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் தூத்துக்குடி மாவட்டம் தூத்தூர், பூத்துறையை சேர்ந்த மீனவர்கள் சூசை நாயகம், அந்தோணி ஆகியோரின் இரண்டு படகுகள் செஷல்ஸ் நாட்டு கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுவரை கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 58 மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். அவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்களின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : Seychelles , Kumari Fishermen, Prison, Seychelles Navy
× RELATED செஷல்ஸ் சிறையில் இருந்து...