×

போரில் 280 கல்வி நிறுவனங்கள் சேதம் என உக்ரைன் தகவல்... ஒருபோதும் போரை விரும்பியதில்லை என ரஷ்யா பதில்!!

ஜெனீவா : உக்ரைனில் போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பு தேவை என  ஐ.நா.பொது செயலாளர் அண்டானியோ குட்டரஸ் அழைப்பு விடுத்துள்ளார். உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே துருக்கியில் நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது. போர் நடைபெறும் மரியுபோல் பகுதியில் இருந்து பொதுமக்களை வெளியேற்ற பாதுகாப்பான பாதையை விரிவுபடுத்துவது தொடர்பாக ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் தங்களது நிலைபாடு குறித்து எந்த பதிலும் அளிக்கவில்லை என்று தெரிவித்தார்.

இந்த நிலையில் ரஷ்யா ஒருபோதும் போரை விரும்பியதில்லை என ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரவ் கூறியுள்ளார்.  தற்போதைய மோதலையும் முடிவுக்கு கொண்டுவரவே ரஷ்யா முயற்சிக்கிறது என குறிப்பிட்டுள்ளார். கடந்த 2 நாட்களில் 1 லட்சம் பேர் உக்ரைனை விட்டு வெளியேறியுள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தகவல் தெரிவித்துள்ளார். உக்ரைனின் மரியுபோல் நகரில் உள்ள குழந்தைகள் மருத்துவமனை மீது நடந்த தாக்குதல் உக்ரைன் அரசால் நடத்தப்பட்டு உள்ளது என ரஷ்ய ராணுவம் குற்றச்சாட்டியுள்ளது.  

உக்ரைன் அதிபரின் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில், ஐ.நா. அமைப்புக்கான ரஷ்யாவின் முதன்மை துணை நிரந்தர பிரதிநிதி டிமிட்ரி போலியான்ஸ்கி டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், போலியான செய்தி எப்படி பிறந்துள்ளது என காணுங்கள் என தெரிவித்து உள்ளார். இதனிடையே  ரஷ்ய துருப்புகள் நடத்திய தாக்குதலில் இதுவரை சுமார் 280 கல்வி நிறுவனங்கள் சேதம் அடைந்துள்ளதாக உக்ரைனின் கல்வி த்துறை அமைச்சர் செர்ஹி ஷ்கார்லெட் தகவல் தெரிவித்துள்ளார்.

Tags : Ukraine ,Russia , Educational Institutions, Damage, Ukraine, Russia
× RELATED உக்ரைனில் ரஷ்யா நடத்திய ஏவுகணைத்...