×

உக்ரைன் மீது படையெடுப்பு எதிரொலி : ரஷ்யாவில் அமெரிக்க வங்கிகள், சோனி, அமேசான் நிறுவனங்களின் சேவைகளுக்கு தடை!!

மாஸ்கோ : உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் 16-வது நாளாக தொடர்ந்து நீடித்து வருகிறது. உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு தடைகளை உலக நாடுகள் ரஷ்யாவுக்கு விதித்து உள்ளன. ரஷ்யாவுடனான வங்கி வர்த்தக சேவைகளை விசா, மாஸ்டர் டெபிட், கிரெடிட் கார்டுகள் தற்காலிகமாக நிறுத்தி உள்ளன. இதைத்தொடர்ந்து, மெக் டொனால்ட்ஸ், ஸ்டார்பக்ஸ், கோக-கோலா, பெப்சி, ஜெனரல் எலக்ட்ரிக் கம்பெனி, அல்ஷயா குரூப், கேப்சி, பிசா ஹட், பர்கர் கிங் உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்களும் ரஷ்யாவில் உள்ள தங்களது விற்பனை மையங்களை தற்காலிகமாக மூடுவதாக தெரிவித்துள்ளன.

இந்த நிலையில் பிரபல பொழுதுபோக்கு நிறுவனமான சோனி மியூசிக் ரஷ்யாவில் தன்னுடைய அனைத்து விதமான சேவை மற்றும் செயல்பாடுகளை தற்காலிகமாக நிறுத்துவதாக தெரிவித்துள்ளது.போரை நிறுத்தி உக்ரைனில் அமைதியை நிலைநாட்ட ரஷ்யாவுக்கு சோனி நிறுவனம் வலியுறுத்தி உள்ளது. மேலும் ரஷ்யாவில் தங்களது செயல்பாடுகளை நிறுத்துவதாக அமெரிக்க வங்கிகள் அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன்படி அமெரிக்க வங்கிகளான கோல்டன் சாச்ஸ் குரூப் (Goldman Sachs Group In) மற்றும் ஜேபிமோர்க சேஸ் (JPMorgan Chase & Co) ஆகியவை ரஷ்யாவில் தங்களது செயல்பாடுகளை நிறுத்துவதாக தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனிடையே உக்ரைன் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யாவில் அனைத்து வணிகங்களையும் நிறுத்தியது அமேசான் நிறுவனம்.



Tags : Ukraine ,US ,Sony ,Amazon ,Russia , Banks of Ukraine, Russia, US, Sony, Amazon
× RELATED ரஷ்யாவில் வாக்குச்சீட்டில் ‘போர்...