×

திருவள்ளூர் அருகே 30 அரிய வகை பறவைகளை வேட்டையாடி விற்பனை: 2 பேருக்கு வலை

திருவள்ளூர்1: திருவள்ளூர் அருகே  அரிய வகை பறவைகளை வேட்ைடயாடி விற்பனைக்கு வைத்திருந்ததை  அறிந்த வனச்சரகர்கள் அவற்றை பறிமுதல் செய்தனர்.  மேலும் தப்பியோடிய 2 பேரை தேடி வருகின்றனர். திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் பகுதியில் அரிய வகை பறவைகளை வேட்டையாடி விற்பனை செய்வதாக நேச்சர் டிரஸ்ட் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் திருவள்ளூர் மாவட்டம் வனச்சரக அலுவலகத்தில் தகவல் கொடுத்தனர். இந்த தகவலின் அடிப்படையில் திருவள்ளூர் வடக்கு காவல் நிலைய வனச்சரக அலுவலர் கிருஷ்ணகுமார் தலைமையிலான வனச்சரகர்கள் மேற்கொண்ட அதிரடி சோதனையில் சட்டத்துக்கு புறம்பாக காமன் கூட், இந்தியன் மார்கன், நார்தன் பின்டேல், காட்டன் பிக்மி, கூஸ் பறவை இனத்தைச் சேர்ந்த 30  அரியவகை பறவைகளை கொன்று குவித்து விற்பனைக்காக வைத்திருந்ததை வனச்சரகர்கள் கைப்பற்றினர். இது தொடர்பாக வன உயிரின குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் கைப்பற்றப்பட்ட பறவைகளை கால்நடை மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்தனர். பிரேதப் பரிசோதனை அறிக்கையினை திருவள்ளூர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர். மேலும் தலைமறைவாக உள்ள இரண்டு குற்றவாளிகளை வனசரகர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags : Tiruvallur , Hunting and selling of 30 rare species of birds near Tiruvallur: Web for 2 people
× RELATED வாக்கு எண்ணிக்கை மையத்தில் கலெக்டர் ஆய்வு