குபேர ஈஸ்வரர் கோயில் கும்பாபிஷேக விழா

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஒன்றியம், புதுமாவிலங்கை கண்டிகை எம்ஜிஆர் நகர் பகுதியில் பழமை வாய்ந்த  குபேர ஈஸ்வரர் எனும் அபிடிஈந்த நாயகி சமேத செந்நெல் படியளந்த நாதர் கோயில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது. கடந்த 7ம் தேதி காலை 9 மணிக்கு கணபதி ஹோமத்துடன் துவங்கிய இந்த பூஜையானது தொடர்ந்து மூன்று நாட்களாக வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் ஓத பல்வேறு பூஜை தொடர்ந்து நடைபெற்று வந்தது.   இதன் ஒரு பகுதியாக நேற்று  மகாயாகங்கள் நடத்தப்பட்டு புண்ணிய நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட  புனித நீர் கோபுர கலசங்கள் மீது  ஊற்றப்பட்டு கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

Related Stories: