×

5 மாஜி, 2 இன்னாள் முதல்வர்கள் தோல்வி

இந்த தேர்தலில் எதிர்பாராதவிதமாக பலம் வாய்ந்த பல தலைவர்கள் காலியாகி உள்ளனர்.  தற்போது முதல்வராக உள்ள 2 பேரும், 5 முன்னாள் முதல்வர்களும் தோல்வியை தழுவி உள்ளனர். பஞ்சாபில் காங்கிரஸ் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியும், உத்தரகாண்டில் பாஜ முதல்வர் புஷ்கர் சிங் தாமியும் தோற்றுள்ளனர். இதே மாநிலத்தில் காங்கிரசின் பலம் வாய்ந்த தலைவரும், முன்னாள் முதல்வருமான ஹரிஸ் சிங் ராவத் தோற்றுள்ளார். பஞ்சாப்பில் முன்னாள் முதல்வர்கள் பிரகாஷ் சிங் பாதல், ரஜிந்தர் கவுர் பாதல், அமரீந்தர் சிங்,  கோவாவில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட முன்னாள் முதல்வர் சர்ச்சில் அலிமாவோ தோல்வியை தழுவி உள்ளனர்.

லக்கிம்பூரில் அள்ளிய பாஜ: உத்தர பிரதேசம் மாநிலம் லக்கிம்பூரில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடிய விவசாயிகள் மீது கார் ஏற்றியதில் 4 பேர் கொல்லப்பட்ட விவகாரத்தில் ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ரா மகன் ஆஷிஸ் மிஸ்ரா கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இதேபோல், ஹத்ராஸ் பகுதியில் 19 வயது இளம்பெண் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டார். இந்த இரண்டு சம்பவங்களும் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், லக்கமிம்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளையும் பாஜ கைப்பற்றி உள்ளது. இதேபோல், ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளையும் பாஜ கைப்பற்றி உள்ளது.

குறைந்த சீட்; அதிக ஓட்டு: உபி.யில் கடந்த 2017 தேர்தலில் பாஜ 300க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றாலும், 40 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றது. ஆனால், இந்த தேர்தலில் அது குறைந்த தொகுதிகளை பிடித்துள்ள போதிலும், 45 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. இது, கடந்த முறையை விட 5 சதவீதம் அதிகம்.

Tags : 5 former, 2 incumbent chiefs defeated
× RELATED கர்நாடகாவில் பாலியல் புகாரில்...