×

அமெரிக்க துணை ஜனாதிபதி விமானம் அவசர தரையிறக்கம்

வாஷிங்டன்:  அமெரிக்க துணை ஜனாதிபதியாக கமலா ஹாரீஸ்  பதவியேற்ற பின் கவுதமாலா மற்றும் மெக்சிகோ நாடுகளுக்கு முதல் முறையாக நேற்று அரசு முறை பயணம் மேற்கொண்டார். இதற்காக அவர் தனி விமானத்தில் சென்றார். துணை ஜனாதிபதி சென்ற விமானத்தில் திடீர் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக விமானம் அவசர அவசரமாக  ஆண்ட்ரூஸ் விமானப்படை தளத்துக்கு திரும்பியது. விமானத்தில் இருந்து இறங்கிய துணை ஜனாதிபதி, ‘‘நான் நலமாக இருக்கிறேன்” என்றார். இதனை தொடர்ந்து வேறு விமானம் ஏற்பாடு செய்யப்பட்டு அவர் தனது பயணத்தை தொடர்ந்தார். இது தொடர்பாக தலைமை  செய்தி தொடர்பாளர சிம்மோன் சான்டர்ஸ் கூறுகையில், “ விமானத்தில் ஏற்பட்டது தொழில்நுட்ப கோளாறு. பெரிய அச்சுறுத்தல்கள் ஏதும் இல்லை” என்றார்….

The post அமெரிக்க துணை ஜனாதிபதி விமானம் அவசர தரையிறக்கம் appeared first on Dinakaran.

Tags : US ,Vice President ,Washington ,Kamala Harris ,Guatemala ,Mexico ,US Vice President ,Dinakaran ,
× RELATED டிக்டாக் செயலியை தடை செய்வதற்கான...