×

பேரறிவாளனுக்கு ஜாமீன் முதல்வருக்கு நன்றி: தாயார் அற்புதம்மாள் பேட்டி

ஜோலார்பேட்டை: திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை சேர்ந்த பேரறிவாளன் (52), ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்து வருகிறார். இந்நிலையில் பேரறிவாளனுக்கு சிறுநீரக தொற்று மற்றும் உடல்நலக்கோளாறு காரணமாக தாயார் அற்புதம்மாள் கோரிக்கையை ஏற்று கடந்த ஆண்டு மே 28ம் தேதி முதல் பரோலில் வந்துள்ளார். அவருக்கு தமிழக அரசு இதுவரை 8 முறை பரோல் வழங்கியுள்ளது. இந்நிலையில் உச்சநீதிமன்றம் நேற்று முன்தினம், பேரறிவாளனுக்கு ஜாமீன் விடுதலை வழங்கியது.

இதனையடுத்து பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் நேற்று அளித்த பேட்டி: இத்தனை மாதம் பரோல் வழங்கி தற்பொழுது ஜாமீன் வழங்குவதற்கு உறுதுணையாக இருந்த தமிழக அரசுக்கும் மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும்  நன்றி தெரிவித்து கொள்கிறேன். இதற்காக ஆதரவளித்த அனைத்து அரசியல் கட்சி சார்ந்தவர்களுக்கும் மற்றும் அனைத்து இயக்கங்களுக்கும் நன்றி. ஏற்கனவே மகன் திருமண ஏற்பாடு செய்யப்பட  இருந்த நிலையில் இந்த வழக்கு எப்படி செல்லும் என்று யோசித்தோம். தற்போது இதற்கு எந்த தடையும் இல்லை. அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. தற்போது சிகிச்சையால் உடல் நிலையில் முன்னேற்றம் அடைந்து  வருகிறார். உடல் நலம் கவனித்துக்கொள்ள நல்ல ஏற்பாடு செய்து கொடுத்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மீண்டும் நன்றி. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Perarivalan ,Arputhammal , Thanks to Perarivalan on bail: Mother Arputhammal interview
× RELATED பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட விடுப்பு...