மாமல்லபுரத்தில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் சுற்றுலா

மாமல்லபுரம்: பல்வேறு மாநிலங்களை சேர்ந்த தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், நேற்று மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணம் மேற்கொண்டனர். பல்வேறு மாநிலங்களை சேர்ந்த தேசிய பேரிடர் மீட்பு குழுகளின் 2 நாள் மாநாடு சென்னையில் நடந்தது. இதில், 11 மாநிலங்களை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, தேசிய பேரிடர் மீட்பு குழுவை சேர்ந்த 18 பேர் நேற்று மாலை ஒரு தனி பஸ் மூலம் மாமல்லபுரம் வந்தனர். அவர்கள், வெண்ணெய் உருண்டைபாறை, அர்ச்சுணன் தபசு, ஐந்து ரதம், கடற்கரை கோயில் உள்பட புராதன சின்னங்களை பார்வையிட்டு ரசித்தனர். அப்போது அவர்களுக்கு, சுற்றுலா வழிகாட்டிகள் மூலம் மாமல்லபுரத்தின் சிறப்பு மற்றும் சிற்பங்கள் யாரால், எந்த காலத்தில் உருவாக்கப்பட்டது என்பது குறித்து தெளிவாக எடுத்துறைக்கப்பட்டது. அவர்கள், மகிழ்ச்சியுடன் புராதன சின்னங்கள் முன்பு, புகைப்படம் எடுத்து கொண்டனர்.

Related Stories: