ஸ்டெம் செல் ஆராய்ச்சியில் நடிகைக்கு டாக்டர் பட்டம்

சென்னை: ஸ்டெம் செல் ஆராய்ச்சியில் நடிகை வித்யா பிரதீப் டாக்டர் பட்டம் பெற்றுள்ளார். பசங்க 2, தடம், சைவம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் வித்யா பிரதீப். இவர் ஸ்டெம் செல் பயாலஜியில் ஆய்வு மேற்கொண்டிருந்தார். இப்போது இதற்காக டாக்டர் பட்டம் பெற்றுள்ளார். இதுகுறித்து வித்யா பிரதீப் கூறும்போது, ‘சென்னையில் உள்ள தனியார் கண் மருத்துவமனையில் கடந்த 10 வருடமாக பணியாற்றினேன். தொடர்ந்து எனது உழைப்புக்கும் முயற்சிக்கும் இப்போது பலன் கிடைத்திருக்கிறது. இப்போது விஞ்ஞானியாகி இருப்பதால் சந்தோஷம் அடைகிறேன். நடிகையாக மட்டும் இருந்துவிட்டு போக விருப்பமில்லை. படித்த படிப்புக்கு அர்த்தம் இருக்கவே இந்த முயற்சியை எடுத்து ஜெயித்திருக்கிறேன்’ என்றார்.

Related Stories: