×

கிரிக்கெட் வீரர் பிரவின் தாம்பே வாழ்க்கை படமானது

மும்பை: இந்திய கிரிக்கெட் வீரர் பிரவின் தாம்பேவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘கௌன் பிரவின் தாம்பே?’ என்ற  படத்தை ஜெயப்பிரத் தேசாய் இயக்கியுள்ளார். வரும் ஏப்ரல் 1ம் தேதி இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் ஓடிடி தளத்தில் வெளியாகும் இப்படத்தில், பிரவின் தாம்பே கேரக்டரில் ஸ்ரேயாஸ் தல்படே நடித்துள்ளார். மற்றும் ஆஷிஷ் வித்யார்த்தி, பரம்பிரதா சாட்டர்ஜி, அஞ்சலி பாட்டீல் நடித்துள்ளனர். ஸ்ரேயாஸ் தல்படே கூறுகையில், ‘இக்பால் படத்தில் ஹீரோவாக நடித்து 17 வருடங்கள் கழித்து, பெரிய திரையில் பிரவின் தாம்பேவாக நடித்ததை நினைத்து பெருமைப்படுகிறேன். இந்த கேரக்டரில் நடிப்பதற்காக அவருடன் இணைந்து பழகியதை என்னால் எப்போதும் மறக்க முடியாது’ என்றார்.

Tags : Pravin Tambe , Life film of cricketer Pravin Tambe
× RELATED காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து...