பிரபாசுடன் இணையும் பிருத்விராஜ்

சென்னை: பிரபாஸ் நடிக்கும் சலார் பான் இந்தியா படத்தில் பிருத்விராஜும் நடிக்கிறார். கேஜிஎப், கேஜிஎப் 2 படங்களை இயக்கியவர் பிரசாந்த் நீல். இவர் அடுத்து இயக்கும் பான் இந்தியா படத்தில் பிரபாஸ், ஸ்ருதிஹாசன் நடிக்கிறார்கள். இந்த படத்துக்கு சலார் என தலைப்பு வைத்துள்ளனர். மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் பிருத்விராஜ். லூசிபர், ப்ரோ டாடி படங்களை இயக்கி, இயக்குனராகவும் புகழ் பெற்றுள்ளார். இவர் சலார் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இது நெகட்டிவ் கேரக்டர் என கூறப்படுகிறது. இதில் நடிக்க ஒப்புக்கொண்டதற்காக பிருத்விராஜுக்கு பிரபாஸ் நன்றி கூறியுள்ளார்.

Related Stories: