×

இன்ஸ்டாகிராமில் மதுபான விளம்பரம் சமந்தாவுக்கு கடும் எதிர்ப்பு

சென்னை: மதுபான விளம்பரத்தில் நடித்திருக்கும் சமந்தாவுக்கு பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இன்ஸ்டாகிராமில் நடிகர், நடிகைகள் பலரும் குறிப்பிட்ட பிராண்ட்களை விளம்பரப்படுத்த பல லட்சங்களில் சம்பளம் வாங்குகின்றனர். அமலா பால், ரெஜினா, மாளவிகா மோகனன் உள்பட பல நடிகைகள் சமீபகாலமாக மதுபானங்களை இன்ஸ்டாகிராமில் விளம்பரப்படுத்தி வருகின்றனர். இதற்கு அவர்களுக்கு பல லட்சம் சம்பளமாக வழங்கப்படுகிறது. இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமந்தா ஒரு வீடியோவை பதிவிட்டு இருந்தார்.

இதில் கவர்ச்சி உடைகளில் தோன்றி மதுபான விளம்பரத்தில் அவர் நடித்துள்ளார். 17 விநாடிகள் மட்டுமே ஓடும் இந்த விளம்பரத்துக்காக சமந்தாவுக்கு பல லட்சம் சம்பளம் தரப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த விளம்பரத்துக்கு சமூக வலைத்தளங்களில் பல்வேறு தரப்பினர் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். ‘பணத்துக்காக நடிகர், நடிகைகள் பலர் இதுபோன்ற விளம்பரங்களில் நடிக்கிறார்கள்’. ‘சினிமாவில் சிகரெட் பிடிப்பதற்கே எதிர்ப்பு இருக்கும் நிலையில், சர்வசாதாரணமாக நடிகைகள் கூட மதுபானத்தை விளம்பரம் செய்கிறார்கள்’ என நெட்டிசன்களும் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

Tags : Instagram ,Samantha , Liquor ad on Instagram is strongly opposed to Samantha
× RELATED நீதிமன்றத்தில் கூட பாதுகாப்பில்லை...