×

பின்பி பாரிபா ஓபன்: 2வது சுற்றில் கரோலின், பீட்ரிஸ்

இண்டியன் வெல்ஸ்: பின்பி பாரிபா ஓபன் டென்னிஸ் போட்டியில் கரோலின் கிரேசியா, பீட்ரிஸ் ஹடாத் ஆகியோர் 2வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். அமெரிக்காவின் இண்டியன் வெல்ஸ் நகரில் நேற்று முடிந்த முதல் சுற்றில் உக்ரைன் வீராங்கனை டயானா யாஸ்ட்ரேமஸ்கா(103வது ரேஙக்), பிரான்ஸ் வீராங்கனை கரோலின் கிரேசியா(66வது ரேங்க்) ஆகியோர் மோதினர். அதில் கரோலின் 6-4, 6-7(8-10), 7-5 என்ற செட்களில் வென்று 2வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் பிரேசில் வீராங்கனை பீடரிஸ் ஹடாத் மையா(61வது ரேங்க்) 6-3, 7-5 என்ற செட்களில் அமெரிக்க வீராங்கனை சோபியா கெனினை(130வது ரேங்க்) வீழ்த்தி 2வது சுற்றுக்குள் நுழைந்தார். அதேபோல் அய்லா டொமனாவிச் (ஆஸ்திரலேியா), அலிசன் ரிஸ்கே(அமெரிக்கா), அன்னா கலின்ஸ்கயா, ஏக்தரினா அலெக்சாண்டரோவா(நடுநிலை வீராங்கனைகள்-ரஷ்யா), அன்ஹெலினா கலினியா(உக்ரைன்), கயா கனேபி(எஸ்டோனியா) ஆகியோர் 2வது சுற்றில் விளையாட தகுதிப் பெற்றுள்ளனர்.

Tags : Pinbay Bariba Open ,Caroline ,Beatrice , Pinby Bariba Open: 2nd Round Caroline, Beatrice
× RELATED பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்; கார்சியாவை...