×

ரஷ்யாவைச் சேர்ந்த செல்சீ உரிமையாளர் சொத்து முடக்கம்

லண்டன்: ரஷ்யாவின் பெரும் பணக்காரர் ரோமன் ஆபரமோவிச்(55). இவருக்கு உலகம் முழுவதும் சொத்துகள்  உள்ளன. கூடவே இங்கிலாந்தின் பிரபல  கால்பந்து அணியான ‘செல்சீ’ உரிமையாளர். ‘உக்ரைன் மீது ரஷ்யா போரைத் தொடர்ந்தால், தங்கள் நாடுகளில் உள்ள ரஷ்யர்களின் சொத்துகள் முடக்கப்படும்’ என்று ஐரோப்பிய, அமெரிக்க நாடுகள் அறிவித்திருந்தன. இதற்கிடையில்  ‘செல்சீ’ அணியை விற்று கிடைக்கும் பணத்தை  உக்ரைனுக்கு வழங்க உள்ளேன்’ என்று ரோமன் கடந்த வாரம் அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.. செல்சீ அணியை 2003ம் ஆண்டு இந்திய மதிப்பில் 14 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ரோமன் வாங்கியுள்ளார். கூடவே இங்கிலாந்தில் உள்ள மற்ற சொத்துகளையும் விற்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டுள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில் இங்கிலாந்தில் உள்ள ரோமன் உள்ளிட்ட ரஷ்ய பணக்காரர்களின் சொத்துகளை அந்நாட்டு அரசு முடக்குவதாக அறிவித்துள்ளது. கூடவே இங்கிலாந்து வந்து  செல்லவும் ரோமனுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ‘செல்சீ தொடர்ந்து போட்டிகளில் விளையாட அனுமதிக்கப்படும்’  என இங்கிலாந்து அரசு தெரிவித்துள்ளது. ‘ரஷ்ய உரிமையாளரிடம் உள்ள செல்சீ அணி உரிமம் குறித்து  பின்னர் முடிவெடுக்கப்படும்‘ என்றும், அதுகுறித்து கால்பந்து வல்லுநர்களிடம் ஆலோசனை செய்யப்படும்’ என்றும் அறிவித்துள்ளது. அதனால் செல்சீ அணியை  விற்கும் ரோமன் முயற்சியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

Tags : Chelsea , Russian Chelsea owner freezes property
× RELATED 2வது முறையாக செல்சீயா சாம்பியன்