×

குறிஞ்சிப்பாடி மார்க்கெட் கமிட்டிக்கு வேர்க்கடலை, உளுந்து வரத்து துவங்கியது

குறிஞ்சிப்பாடி:  குறிஞ்சிப்பாடி மார்க்கெட் கமிட்டிக்கு உளுந்து மற்றும் வேர்க்கடலை வரத்து தொடங்கியது.
 குறிஞ்சிப்பாடி மற்றும் சுற்றியுள்ள தம்பிபேட்டை, சத்திரம், அன்னதானம்பேட்டை, குள்ளஞ்சாவடி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் அதிக அளவில் வேர்க்கடலை மற்றும் உளுந்து சாகுபடி செய்துள்ளனர். இதன் அறுவடை தற்போது தொடங்கி தீவிரமாக நடந்து வருகிறது.

இதனால், குறிஞ்சிப்பாடி மார்க்கெட் கமிட்டிக்கு நேற்று 30 மூட்டை வேர்க்கடலை, 30 மூட்டை உளுந்து விற்பனைக்கு வந்தது. 80 கிலோ எடை கொண்ட  வேர்க்கடலை  ஒரு மூட்டை குறைந்தபட்சமாக 7,890 ரூபாய்க்கும், அதிகபட்சமாக 7,909க்கும் கொள்முதல் செய்யப்பட்டது. அதேபோல், உளுந்து குறைந்தபட்சமாக 6,749க்கும், அதிகபட்சமாக 6,856 ரூபாய்க்கும் கொள்முதல் செய்யப்பட்டது.

Tags : Kurinjipadi Market Committee , Curry, Market, Peanut, Peas, Bring
× RELATED தமிழ்நாட்டில் இரவு 7-மணி வரை 72.09 % வாக்குகள் பதிவாகி உள்ளன