×

தேர்தல் முடிவுகள் ஏமாற்றம் அளிக்கிறது; தேர்தல் தோல்வி குறித்து முழுமையாக ஆய்வு மேற்கொள்ளப்படும்: காங். செய்தித் தொடர்பாளர் சுர்ஜேவாலா பேச்சு..!!

டெல்லி: தேர்தல் முடிவுகள் ஏமாற்றம் அளிக்கிறது என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுர்ஜேவாலா தெரிவித்திருக்கிறார். பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அபார வெற்றியை பதிவு செய்திருக்கிறது. பஞ்சாபில் உள்ள மொத்தம் 117 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி 90 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளராக அறியப்படும் பக்வந்த் மன், 50,000 வாக்குகளைவிடவும் கூடுதல் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். 70 ஆண்டுகளுக்கு பிறகு ஆம் ஆத்மி வெற்றிபெற்றுள்ளதை தொண்டர்கள் இனிப்புகள் வழங்கியும், நடனமாடியும் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் இது தொடர்பாக பேசிய சுர்ஜேவாலா, தேர்தல் தோல்வி குறித்து முழுமையாக ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார். தேர்தலில் மக்கள் மன்றம் அளித்த தீர்ப்பை காங்கிரஸ் கட்சி தலைவணங்கி ஏற்றுக்கொள்கிறது. காங்கிரஸ் கட்சியின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப 5 மாநில தேர்தல் முடிவுகள் இல்லை என்பது உண்மைதான். கோவா, உத்தராகண்ட், பஞ்சாப் மாநிலங்களில் காங்கிரஸுக்கு வெற்றி கிடைக்கும் என்று எதிர்பார்த்தோம். 3 மாநில மக்களின் நம்பிக்கையை காங்கிரஸ் கட்சி பெறவில்லை என்பதை ஒப்புக்கொள்கிறோம். பஞ்சாபில் அமர்ந்தர் சிங் ஆட்சியின் மீது மக்களுக்கு ஏற்பட்டிருந்த அதிருப்தியால் காங்கிரஸ் தோல்வி அடைந்துள்ளது.

பஞ்சாபில் மக்கள் மாற்றத்துக்காக வாக்களித்துள்ளனர்; வெற்றி பெற்ற ஆம் ஆத்மிக்கு வாழ்த்துக்கள். ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பகவந்த் மான் ஆகியோருக்கும் வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய சுர்ஜேவாலா, உத்திரப்பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி புத்துயிரூட்டப்பட்டு உள்ள போதிலும் கூடுதல் தொகுதிகளை கைப்பற்ற முடியவில்லை. உத்தராகண்ட் மற்றும் கோவாவில் தீவிரமாக பணியாற்றியும் வெற்றி பெறவில்லை என்று காங்கிரஸ் கட்சி ஒப்புக்கொள்கிறது. தோல்வியில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு, மக்களுடன் இணைந்து முழுமையாக பாடுவோம் என்று காங்கிரஸ் உறுதியாக உள்ளது என்று கூறினார்.

Tags : Surjewala , Election results, disappointment, Cong. Spokesperson Surjewala
× RELATED சட்டமன்ற தேர்தல் எதிரொலி ம.பி. காங். பொறுப்பாளராக சுர்ஜிவாலா நியமனம்