×

இந்திய டெஸ்ட் அணியின் டாப் ஆர்டர் பேட்டிங்: ரோஹித்துக்கு கவாஸ்கர் அறிவுரை

மும்பை: இந்திய டெஸ்ட் அணியின் டாப் 5 இப்படி தான் இருக்கனும் என்று முன்னாள் கேப்டன் கவாஸ்கர் கூறியுள்ளார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் இந்திய அணி தற்போது 5வது இடத்தில் உள்ளது. எஞ்சிய 9 போட்டிகளிலும் வென்றால் மட்டுமே இறுதி போட்டிக்கு முன்னேற முடியும் என்ற நிலை உள்ளது.  இந்த நிலையில், இந்திய டெஸ்ட் அணியை எப்படி கட்டமைப்பது என்று ரோகித் சர்மாவுக்கு கவாஸ்கர் அறிவுரை கூறி உள்ளார். அது வருமாறு:-

இந்திய டெஸ்ட் அணிக்கு நான் மயங்க் அகர்வாலைதான் தேர்வு செய்வேன். அவர் உள்நாட்டில் பாஸ்போல் ஆடுகிறார். அதே நேரத்தில் வெளிநாட்டில் சொதப்புகிறார். இருப்பினும் சுப்மான்கில்லைவிட மயங்க்அகர்வால் அதிக ரன்களை குவித்துள்ளார். அவர் வெளிநாட்டிலும் விளாச தொடங்கினால் அவரை அணியிலிருந்து நீக்க கூடாது. சுப்மான் கில் திறமையான வீரர் என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் தற்போது காயத்திலிருந்து அணிக்கு திரும்பியுள்ள அவரிடம் போட்டிக்கான பயிற்சி இருந்திருக்காது. ரஞ்சி போட்டியில் விளையாடி ரன் குவிக்காத வரை சுப்மான் கில்லை அணியில் சேர்க்க கூடாது.

இதேபோல் 3வது வீரராக ஹனுமா விஹாரிக்கு மட்டும் தான் வாய்ப்பு வழங்க வேண்டும். அவர் தான் அந்த இடத்துக்கு பொருத்தமானவர். அவர் இதுவரை எந்த தவறும் செய்யவில்லை. தென்னாப்பிரிக்க டெஸ்டில் கூட கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி ரன்களை சேர்த்தார். அவருக்கு அதிக வாய்ப்புகள் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். மேலும் 5வது இடத்தில் ஸ்ரேயாஸ் ஐயரைதான் களமிறக்கவேண்டும். தற்போது அவர் நல்ல பார்மில் உள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான அறிமுக போட்டியில் சிறப்பாக விளையாடினார். எனவே டாப் 5 வரிசையில் இடம்பெற அவருக்கு முழு தகுதியும் உள்ளது. இவ்வாறு கவாஸ்கர் கூறினார்.

Tags : Indian ,Gavaskar ,Rohit , Indian Test team, top order, Gavaskar
× RELATED டி20 உலக கோப்பையில் பங்குபெற ஐபிஎல்...