×

இண்டியன் வெல்ஸ், மியாமி தொடர் ஜோகோவிச் விலகல்

இண்டியன்வெல்ஸ்: அமெரிக்காவில் இண்டியன் வெல்ஸ் பிஎன்பி பாரிபாஸ் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது. இதில் 2ம் நிலை வீரரான  செர்பியாவின் ஜோகோவிச் பெயர் போட்டி அட்டவணையில் இடம்பெற்றிருந்தது. இருப்பினும் அவர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாததால் அமெரிக்காவுக்கு வர அனுமதி அளிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது.

இந்நிலையில் இண்டியன் வெல்ஸ் மற்றும் மியாமி ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து விலகுவதாக ஜோகோவிச் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் டுவிட்டர்  பதிவில், இண்டியன் வெல்ஸ், மியாமி தொடரின் டிராவில் நான் பட்டியலிடப்பட்டபோதும், என்னால் பயணம் செய்ய இயலாது என்று எனக்கு தெரியும். எனக்காக விதிமுறைகள் மாறாது. இதனால் என்னால் அமெரிக்காவில் விளையாட முடியாது என்பதை நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான மையம் உறுதிபடுத்தி உள்ளது. இந்த சிறந்த போட்டிகளில் விளையாடுபவர்களுக்கு வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.

Tags : Indian Wells ,Miami Series ,Djokovic , Indian Wells, Miami, Djokovic, Dissociation
× RELATED பிஎன்பி பரிபாஸ் ஓபன் டென்னிஸ்: அல்காரஸ், ஸ்வியாடெக் சாம்பியன்