×

மருத்துவம் படிக்க கல்விக்கட்டணம் செலுத்த முடியாமல் தவித்த மாணவிக்கு ரூ.2 லட்சம் கொடுத்து உதவிய சிங்கப்பூர் வாழ் தமிழர்: பெற்றோர் மகிழ்ச்சி

மதுரை: மருத்துவம் படிக்க கல்விக்கட்டணம் செலுத்த முடியாமல் தவித்த மாணவிக்கு சிங்கப்பூர் வாழ் தமிழர் ஒருவர் ரூ.2 லட்சம் கொடுத்து உதவியுள்ளார். மகளின் மருத்துவ கனவை நினைவாக்க உதவிய சன் செய்திக்கு மாணவியின் தாய் நன்றி தெரிவித்துள்ளார். மதுரை சிதம்பரநாதன்  - கோமதி தம்பதியின் மகள் ஜெய ஹரினிக்கு சன் செய்தியின் மூலம் உதவி கிடைத்துள்ளது. நீட் தேர்வு எழுதி 343 மதிப்பெண் பெற்று அரசு ஒதுக்கீட்டில் ஹோமியோபதி மருத்துவம் படிக்க ஜெய ஹரினிக்கு இடம் கிடைத்துள்ளது.

குமரி தனியார் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியில் படிக்க  ஆண்டுக்கு ரூ.2.50 லட்சம் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. ஏழ்மையின் காரணமாக மகளின் மருத்துவ கனவை நிறைவேற்ற முடியாத நிலை உள்ளதாக மாற்றுத்திறனாளியான ஜெய ஹரினியின் தாய் சன் செய்தியில் பேட்டியளித்திருந்தார். ஜெய ஹரினியின் தாயின் பேட்டியை பார்த்த சிங்கப்பூர் வாழ் தமிழர் சுந்தர், ஜெய ஹரினிக்கு உதவ முன்வந்துள்ளார். அதன்படி சிங்கப்பூர் வாழ் தமிழர் சுந்தர், ஜெய ஹரினியின் மருத்துவப் படிப்புக்கு ரூ.2 லட்சத்தை கல்லூரியில் செலுத்தி உள்ளார்.


Tags : Singapore ,Java Tamil , Medical, Tuition, Tamil living in Singapore
× RELATED சிங்கப்பூரில் இருந்து...