தேசிய அளவில் பாஜகவுக்கு மாற்று சக்தி என யாரும் இல்லை என்பது நிரூபணம் ஆகியுள்ளது : அண்ணாமலை பேச்சு

சென்னை : உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் பாஜகவின் வெற்றி முகத்தை அடுத்து நாடு முழுவதும் பாஜக தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர். சென்னை கமலாலயத்தில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இனிப்பு வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்த அவர், தேசிய அளவில் பாஜகவுக்கு மாற்று சக்தி என யாரும் இல்லை என்பது நிரூபணம் ஆகியுள்ளது.பாஜகவின் உழைப்பிற்கு ஊதியம் கிடைத்துக் கொண்டே வருகிறது.பாஜகவின் வளர்ச்சி அரசியலுக்கு மக்கள் மிகப்பெரிய அங்கீகாரம் கொடுத்துள்ளனர்.

கொரோனாவைக் கட்டுப்படுத்தியது உத்தரப் பிரதேசத்தில் பாஜக வெற்றிபெற உதவியது. உ.பி.யில் 33 ஆண்டுகளுக்கு பின் ஆளுங்கட்சி ஆட்சியை பிடிக்கிறது. 2024ல் ஒரே நாடு ஒரே தேர்தல் வந்தாலும் எதிர்கொள்ள தயாராக உள்ளோம். இதுவரை இந்தியாவில் மதத்தை வைத்து வாக்கு வங்கி அரசியல் இருந்தது, இப்போது அது உடைக்கப்பட்டுள்ளது;வட மாநிலங்களில் கொரோனாவை கையாண்ட விதத்திற்குத்தான், மக்கள் வெற்றியை அளித்துள்ளனர், என்றார். இதனிடையே இனி வரும் காலங்களில் பெட்ரோல் விலை உயருமா என அண்ணாமலையிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், பெட்ரோல் விலை உயர்வு இருக்குமா? இருக்காதா என் அப்பதில் அளிக்க நான் வல்லுநர் அல்ல என்றார்.

தொடர்ந்து, உத்திரப்பிரதேச தேர்தல் வரலாற்றில் 2-வது முறையாக தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று பாஜக வரலாறு படைத்திருக்கிறது என ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். பாஜக மேல் வாக்காளர்கள் அதிக நம்பிக்கை  வைத்துள்ளனர் என்பது தெளிவாகிறது எனவும் எல்.முருகன் கூறியுள்ளார்.

Related Stories: