சென்னை : அனைத்து மாவட்ட திருக்கோயில்களின் வழிகாட்டி கையேடுகள் விரைவில் வெளியிடப்படும் என இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்திருக்கிறது.இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “ தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்களின் அறிவுரையின்படி திருக்கோயில்களில் மாவட்டக் கையேடுகளைப் வெளியிட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் இதன் மென் பிரதியை இணை ஆணையர்கள் சேகரித்து இவ்வலுவலகத்திற்கு அணுப்பி வைக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள அணைத்து திருக்கோயில்களிலும் தலவரலாறுகள் வெளியிட அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது மாவட்ட வாரியாக அந்தந்த பகுதியின் சிறப்பு வாய்ந்த மற்றும் பாடல்பெற்ற. தலங்களைத் தொகுத்து ஆன்மீகத் தலங்களுக்குப் பயணிப்பவர்களுக்கு வசதியாக திருக்கோயில்களின் வழிகாட்டி” எணும் பெயரில் மாவட்டக் கையேடுகள் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த மாவட்ட கையேட்டில் திருக்கோயிலின் சுருக்க வரலாறு, அமைவிட வரைபடம், தொடர்பு முகவரி, திருக்கோயிலின் சிறப்பு மற்றும் தரிசிக்க வேண்டிய படங்களுடன் கூடிய தகவல்களுடன், அருகில் உள்ள சிறப்பு தலங்களின் குறிப்புகளும் வெளியிட அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. ஒரே அளவில் பல்வண்ண தரத்தில் வெளியிடவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மெண்பிரதியை (soft copy) இணையத் தளத்தில் பதிவேற்றம் செய்து தலத்தின் வரலாற்றுச் சிறப்பை பக்தர்கள் எளிதாக அறிந்து கொள்ளும் வகையில் விரைவு குறியீடுகளும் (QR Code) இவெளியிடப்படும்.
இதனால் இந்தியா மற்றும் மற்ற வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள் பார்த்து பயனடையும் வகையில் இத்தகைய கையேடுகள் தயார் செய்ய மண்டல இணை ஆணையர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் முடிவுற்று பக்தர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.