×

ரஷிய தாக்குதலினால் உக்ரைனில் இதுவரை 37 குழந்தைகள் பலி.. 10 லட்சம் குழந்தைகள் அண்டை நாடுகளில் தஞ்சம் : யுனிசெப்

ஜெனீவா : ரஷிய தாக்குதலினால் உக்ரைனில் இதுவரை 37 குழந்தைகள் உயிரிழந்ததாகவும், 50 குழந்தைகள் காயமடைந்ததாகவும் யுனிசெப் அமைப்பு தெரிவித்துள்ளது. உக்ரைன் தலைநகர் கீவ், கார்க்கிவ், சுமி, மரியு போல் உட்பட முக்கிய நகரங்களில் ரஷிய படைகள் நடத்தி வரும் தாக்குதல் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருகிறது. இதுவரை 21 லட்சம் பேர் அகதிகளாக நாட்டைவிட்டு வெளியேறி உள்ளனர். பொதுமக்கள் 516 பேர் உயிரிழந்துள்ளனர். 908 பேர் காயம் அடைந்துள்ளதாக ஐ.நா.கூறுகிறது. மரியுபோல் நகரில் உள்ள குழந்தைகள் மருத்துவமனை மீது ரஷிய படைகள் தாக்குதல் நடத்தியுள்ளன.

இதற்கு ட்விட்டரில் கண்டனம் தெரிவித்துள்ள ரஷிய அதிபர் ஜெலன்ஸ்கி, இது மிகப்பெரிய கொடுமை என்று சாடி இருக்கிறார். மருத்துவமனை உருக்குலைந்து பற்றி எரியும் காட்சியை உக்ரைன் அரசு வெளியிட்டுள்ளது.   
இதனிடையே உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலால் 10 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் உக்ரைனில் இருந்து அண்டை நாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளனர் என்று யுனிசெப் தெரிவித்துள்ளது. மேலும் உக்ரைனில் 37 குழந்தைகள் இதுவரை உயிரிழந்துள்ளதாகவும் யுனிசெப் கூறியுள்ளது.சுமி நகரில் ரஷிய படைகள் வான்வழி தாக்குதலில் ஈடுபட்டதாக உக்ரைன் அரசு குற்றம் சாட்டியுள்ளது.


Tags : Ukraine ,UNICEF , Russia, attack, Ukraine, children, killed
× RELATED உக்ரைனில் ரஷ்யா நடத்திய ஏவுகணைத்...