×

உத்தரப் பிரதேசம், மணிப்பூரில் பாஜக முன்னிலை; உத்தராகண்ட், கோவாவில் காங்கிரஸ் முன்னிலை; பஞ்சாப்பில் ஆம் ஆத்மி முன்னிலை

லக்னோ : உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் சமீபத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடந்து முடிந்தது.  இதில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. காலை 8 மணிக்கு வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது.

உத்தர பிரதேசம் சட்டப்பேரவைத் தேர்தல்

உத்தர பிரதேசம் மொத்தம் உள்ள 403 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு 202 இடங்கள் தேவைப்படுகிறது.  7 கட்டங்களாக நடைபெற்ற தேர்தலில் 61.04% வாக்குகள் பதிவாகின.

உத்தரப்பிரதேசத்தில் பாஜக முன்னிலை வகிக்கிறது.
பாஜக : 117
எஸ்பி+: 93
பிஎஸ்பி: 05
காங்கிரஸ் : 03
பிற : 01

பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தல் :

 பஞ்சாப் மொத்தம் உள்ள 117 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு 59 இடங்கள் தேவைப்படுகிறது.
ஒரே கட்டமாக நடைபெற்ற தேர்தலில் 71.95% வாக்குகள் பதிவாகின.

பஞ்சாப் மாநில சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரசை பின்னுக்கு தள்ளி ஆம் ஆத்மி கட்சி முன்னிலை வகிக்கிறது.
ஆம் ஆத்மி: 39
காங்கிரஸ் : 29
பாஜக+: 04
அகாலிதளம்+;07
பிற : 01

உத்தரகாண்ட் சட்டப்பேரவை தேர்தல்

உத்தரகாண்ட் மாநிலத்தில் மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு தேவை 36 இடங்கள் தேவைப்படுகிறது.  ஒரே கட்டமாக நடைபெற்ற தேர்தலில் 65.37% வாக்குகள் பதிவாங்கி உள்ளன.

உத்தரகாண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது.
காங்கிரஸ் : 32
பாஜக : 21
ஆம் ஆத்மி : 03
பிற : 01

மணிப்பூர் சட்டப்பேரவை தேர்தல்

மணிப்பூரில் மொத்தம் உள்ள 60 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு தேவை 31 இடங்கள் தேவைப்படுகிறது. இரண்டு கட்டமாக நடைபெற்ற தேர்தலில் 74% வாக்குகள் பதிவாகி உள்ளன.

மணிப்பூரில் பாஜக முன்னிலை வகிக்கிறது.
பாஜக : 17
காங்கிரஸ்+:14
என்பிபி: 02
பிற :04  

கோவா சட்டப்பேரவை தேர்தல்
:

கோவாவில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு தேவை 21 இடங்கள் தேவை.
ஒரே கட்டமாக நடைபெற்ற தேர்தலில் 79.61% வாக்குகள் பதிவாகி உள்ளன.

கோவாவில் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது.
காங்கிரஸ்+22
பாஜக : 16
திரிணாமுல்+04
பிற : 01



Tags : Bajaka ,Utar Pradesh, ,Manipur ,Utharakhand ,Congress ,Goa ,Aam Admi ,Punjab , Uttar Pradesh, Punjab, Uttarakhand, Goa, Manipur
× RELATED பாஜக எம்.பி. பிரிஜ் பூஷண் மீதான பாலியல்...