தீவிர அரசியலில் இருந்து விலகல்: ஏ.கே.அந்தோணி அறிவிப்பு

புதுடெல்லி: முன்னாள் ஒன்றிய அமைச்சரும்,  மூத்த காங்கிரஸ் தலைவருமான ஏ.கே. அந்தோணியின்  மாநிலங்களவை உறுப்பினர் பதவி காலம் வரும் 2ம் தேதியுடன் முடிகிறது. இந்நிலையில், அவர் நேற்று அளித்த பேட்டியில், ‘‘ எனக்கு தற்போது 81 வயதாகிறது. உடல் நிலையும் சரியில்லை. கட்சியில் இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும்.  மாநிலங்களவைக்கு மீண்டும் போட்டியிட மாட்டேன்.  பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் சொந்த மாநிலமான கேரளாவில் சென்று தங்க உள்ளேன்.  இனி தீவிர அரசியலில் ஈடுபட மாட்டேன். ஆனால், மாநில அரசியலில் கவனம் செலுத்த உள்ளேன்,’’ என்றார்.

கடந்த 1970ம் ஆண்டு முதல் முறையாக சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அந்தோணி  1977, 1995, 2001ம் ஆண்டு என மூன்று முறை கேரள முதல்வர் பதவி வகித்துள்ளார். 5 முறை எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டு, பாதுகாப்பு துறை உட்பட பல்வேறு முக்கிய ஒன்றிய துறைகளுக்கு அமைச்சராக இருந்துள்ளார்.

Related Stories: