×

மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி தொட்டியம் பேரூராட்சி துணை தலைவர் ராஜினாமா

முசிறி: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி தொட்டியம் பேரூராட்சி துணைத்தலைவர் நேற்று ராஜினாமா செய்தார். திருச்சி மாவட்டம், தொட்டியத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தொட்டியம் பேரூராட்சியின் துணை தலைவர் பதவி, திமுக கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், 6வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுகவை சேர்ந்த ராஜேஷ் துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில், கூட்டணி கட்சிக்கான இடங்களில் பொறுப்பு ஏற்றவர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து தொட்டியம் பேரூராட்சி துணைத்தலைவர் ராஜேஷ், தனது பதவியை நேற்று ராஜினாமா செய்தார்.

Tags : Md. KKA ,Deputy Chairman ,Union's Imperance ,Stalin , The deputy mayor of Thotiyam resigned on the orders of MK Stalin
× RELATED தென்காசியில் மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம்