×

பேரறிவாளனுக்கு ஜாமின் வழங்கியது, நீதிக்காக போராடும் அனைவருக்கும் ஊக்கமளிக்கும் மகத்தான தீர்ப்பு!: முத்தரசன், கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் வரவேற்பு..!!

சென்னை: ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 32 ஆண்டுகளாக சிறையில் இருந்த பேரறிவாளனுக்கு ஜாமின் வழங்கப்பட்டிருக்கிறது. பேரறிவாளனுக்கு ஜாமின் வழங்கக்கூடாது என்ற ஒன்றிய அரசின் எதிர்ப்பை உச்சநீதிமன்றம் நிராகரித்தது. பேரறிவாளன் விடுதலை தொடர்பாக ஆளுநர் முடிவெடுக்க தாமதிப்பதால் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தொடர்ந்து பரோல் வழங்கப்பட்டு வருகிறது. பரோலில் இருந்தாலும் வெளியே செல்ல முடியாததால் பேரறிவாளன் ஜாமின் வழங்க கோரியிருந்தார். தற்போது 30 ஆண்டுகளுக்கு பிறகு பேரறிவாளனுக்கு ஜாமின் வழங்கப்பட்டிருக்கிறது. பரோலில் உள்ள பேரறிவாளனுக்கு கட்டுப்பாடுகள் கடுமையாக இருப்பதை சுட்டிக்காட்டி ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.

மாதந்தோறும் முதல் வாரத்தில் ஜோலார்பேட்டையில் உள்ள காவல் அதிகாரி முன் ஆஜராக நிபந்தனை விதிக்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பேரறிவாளன் தரப்பு வழங்கறிஞர் பிரபு, பேரறிவாளனை போன்று ராஜிவ்காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய மற்றவர்களுக்கும் பிணை கிடைக்க வாய்ப்புள்ளது. தனித்தனியாக மனு செய்தால் மற்றவர்களுக்கும் பிணை கிடைக்க வாய்ப்பிருக்கிறது என்று கூறினார். பேரறிவாளனுக்கு ஜாமின் கிடைத்ததற்கு பல்வேறு தலைவர்கள் வரவேற்பு அளித்துள்ளனர். அந்தவகையில்,

* பேரறிவாளனுக்கு ஜாமின் வழங்கியது மகிழ்ச்சி அளிக்கிறது என்று தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார்.

* பேரறிவாளனுக்கு ஜாமின் வழங்கியதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வரவேற்பு தெரிவித்திருக்கிறார். மாநில அமைச்சரவையின் முடிவை ஏற்று பேரறிவாளனை முழுமையாக விடுதலை செய்ய வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்திருக்கிறார்.

* பேரறிவாளனுக்கு ஜாமின் வழங்கியது,  வரவேற்கத்தக்க தீர்ப்பு என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார்.

* பேரறிவாளனுக்கு ஜாமின் வழங்கியது, நீதிக்காக போராடும் அனைவருக்கும் ஊக்கமளிக்கும் மகத்தான தீர்ப்பு என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி. ரவிக்குமார் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

* பரோல் என்பது இன்னொரு சிறை தான்; உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியதை யாரும் குறை கூற முடியாது என்று திருச்சி வேலுச்சாமி கருத்து தெரிவித்துள்ளனர்.


Tags : Perarivalan ,Mutharasan ,K. Balakrishnan , Perarivalan, Jamin, Mutharasan, K. Balakrishnan
× RELATED 2019ல் மொத்தமா வரும்போதே 39ல் வெற்றி;...