மாஜி அமைச்சர் ஜெயக்குமாருக்கு எதிராக மீனவர்கள் உண்ணாவிரதம்: ராயபுரத்தில் பரபரப்பு

தண்டையார்பேட்டை: அதிமுக மாஜி அமைச்சர் ஜெயக்குமாருக்கு எதிராக மீனவர்கள் உண்ணாவிரதம் இருப்பதால் ராயபுரத்தில் பரபரப்பு நிலவுகிறது. சென்னை திருவொற்றியூர் நல்லதண்ணீர் ஓடைக்குப்பம் பகுதியை சேர்ந்த மீனவர் குடும்பத்துக்கு 10 அடுக்குமாடி குடியிருப்புகள் திருவொற்றியூர் எல்லையம்மன் கோயில் அருகே கட்டப்பட்டு வழங்கப்பட்டது. கடந்த அதிமுக ஆட்சியில், அமைச்சராக இருந்த ஜெயக்குமார் 83 குடியிருப்புகளை தனது ஆதரவாளர்களுக்கு வழங்கியுள்ளார்.

இதுசம்பந்தமாக கடந்த மாதம் 26ம் தேதி மீனவர் சங்க தலைவர் வழக்கறிஞர் செல்வராஜ்குமார் திருவொற்றியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் இதுவரை ஜெயக்குமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது.இந்த நிலையில், ஜெயக்குமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வழக்கறிஞர் செல்வராஜ்குமார் தலைமையில் அப்பகுதி மீனவர்கள் ராயபுரம் எஸ்என்.செட்டி தெருவில் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.

Related Stories: