×

வேதாரண்யத்தில் உப்பு உற்பத்தி தாமதமாக துவக்கம்: 6 லட்சம் டன் இலக்கை எட்டுவது கடினம்

வேதாரண்யம்: நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு, கடினல்வயல் பகுதிகளில் 9,000 ஏக்கரில் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. இப்பகுதியில் ஆண்டுதோறும் சாப்பாடு மற்றும் ரசாயன உப்பு 6 லட்சம் டன் உற்பத்தி செய்யப்பட்டு பல்வேறு மாவட்டம், பிற மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. வழக்கமாக ஜனவரி மாதம் உப்பு உற்பத்தி துவங்கி செப்டம்பர் வரை நடைபெறும். மழை காலத்தில் 3 மாதம் உப்பு உற்பத்தி நிறுத்தப்படும்.

இந்தாண்டு மழைக்காலம் நிறைவடைந்து கடந்த ஜனவரி மாதத்தில் உப்பு உற்பத்தி துவங்கப்பட்டது. அப்போது காலம் தவறி பெய்த மழையால் உற்பத்தி பாதிக்கப்பட்டது. கடந்த மாதமும் பெய்த மழையால் உப்பு பாத்திகளை மழைநீர் சூழ்ந்ததால் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இந்தாண்டு ஜனவரி முதல் விட்டுவிட்டு மழை பெய்ததால் 2 மாதமாக உப்பு உற்பத்தி தற்போது துவங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 2 மாதத்தில் ஏக்கருக்கு 20 டன் உப்பு எடுக்க வேண்டிய நிலையில், தற்போது ஏக்கருக்கு ஒரு டன் மட்டுமே உப்பு உற்பத்தி நடந்துள்ளது.

இந்தாண்டு முழுவீச்சில் உப்பு உற்பத்தி நடந்தாலும் ஆண்டுதோறும் கிடைக்கும் 6 லட்சம் டன் உற்பத்தி செய்ய முடியாது. தொடர்ந்து வெயில் அடித்தால் மட்டுமே இன்னும் ஒரு வாரத்தில் முழுவீச்சில் உப்பு உற்பத்தி துவங்கி நல்ல முறையில் உப்பு உற்பத்தியாகும் என்று உப்பள தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

Tags : Vedaranyam , In Vedaranyam, salt production, initiation
× RELATED வேதாரண்யம் அருகே குடிதண்ணீர் கேட்டு பெண்கள் காலிக்குடங்களுடன் மறியல்