×

உக்ரைன் உடனான போர் எதிரொலி!: ரஷ்யாவில் வணிகத்தை நிறுத்துவதாக பெப்சி, கோக் நிறுவனங்கள் அதிரடி அறிவிப்பு..!!

லண்டன்: உக்ரைன் மீது போர் தொடுத்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பெப்சி, கோக் நிறுவனங்கள் ரஷ்யாவில் தங்களது விற்பனையை நிறுத்தியுள்ளன. உக்ரைன் மீது ரஷ்யா 14வது நாளாக போர் தொடுத்து வரும் நிலையில் இவ்விரு நாடுகளை சேர்ந்த வீரர்கள் உள்பட பலர் உயிரிழந்துள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் உக்ரைனை விட்டு வெளியேறியுள்ளனர். ரஷ்யாவின் நடவடிக்கையை கண்டித்து உலகின் பல்வேறு நாடுகளும் பொருளாதார தடைகள் விதித்துள்ளன.

ஐநா பாதுகாப்பு கவுன்சில், மனித உரிமைகள் ஆணையம், ஐநா பொதுச்சபை என்று பல மேடைகளில் ரஷ்யாவிற்கு எதிராக தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. மேலும் உக்ரைன் மீதான தாக்குதலை கண்டிக்கும் வகையில் ஆப்பிள், லிவிஸ், நெட்பிளிக்ஸ், மைக்ரோசாப்ட் போன்ற பல்வேறு நிறுவனங்கள் தங்களது சேவையை ரஷ்யாவில் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர். போர் காரணமாக உலக நாடுகளும் கூட கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் உக்ரைனுக்கு எதிரான போர் எதிரொலியாக ரஷ்யாவில் தங்களது செயல்பாடுகளை நிறுத்துவதாக கோகோ கோலா, பெப்சி உள்ளிட்ட குளிர்பான நிறுவனங்களும் அறிவித்துள்ளன. ரஷ்யாவில் இயங்கி வரும் 847 உணவகங்களை மெக்டொனால்டு மூடியுள்ளது.  இதனைத்தொடர்ந்து காபி ஹவுஸ் எனும் ஸ்டார்பக்ஸ் நிறுவனமும் ரஷ்யாவில் தங்களது அனைத்து வணிக நடவடிக்கைகளையும் இடைநிறுத்தம் செய்வதாக அறிவித்திருந்தது. இதுதொடர்பாக கோகோ கோலா நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், உக்ரைனில் நடந்த இந்த சோகமான நிகழ்வுகளால் மனசாட்சியற்ற விளைவுகளைத் தாங்கும் மக்களுடன் எங்கள் இதயங்கள் உள்ளன. இதனால்  ரஷ்யாவில் எங்களது வணிகத்தை நிறுத்துகிறோம் என்று தெரிவித்துள்ளது.

Tags : Ukraine ,Pepsi ,Coke ,Russia , War, Russia, Pepsi, Coke Company
× RELATED உக்ரைனின் கார்கிவ் நகரில் அமைந்த முதல் ‘பங்கர் பள்ளி