×

எல்.ஐ.சி. பொதுப் பங்கு வெளியீட்டுக்கு செபி அனுமதி..பங்கு விற்பனை மூலம் ரூ.80,000 கோடி திரட்ட இலக்கு!!

மும்பை : ஒன்றிய அரசுக்கு சொந்தமான ஆயுள் காப்பீடு நிறுவனமான எல்ஐசியின் 5% பங்குகளை பொதுமக்கள் விற்பனைக்கு வெளியிட செபி அனுமதி அளித்துள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. பங்கு வெளியீடு தொடர்பாக அளிக்கப்பட்ட 650 பக்க விவர அறிக்கையை செபி பரிசீலித்து அனுமதி வழங்க முடிவை எடுத்ததாக தெரிகிறது. எல்ஐசியின் 5% பங்குகளை விற்பதன் மூலம் 65,000 முதல் 85,000 கோடி ரூபாய் வர திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எனினும் பங்கின் முக மதிப்பு குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. மேலும் எல்ஐசி பங்குகள் விற்பனை தேதி குறித்தும் அரசு இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இந்த மாதம் விற்பனை வரப்படும் என்று கூறப்பட்ட பங்கு விற்பனை ரஷியா - உக்ரைன் இடையிலான போர் நீடிப்பதால் அடுத்த மாதத்திற்கு தள்ளிப் போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பங்குச் சந்தைகள் கடந்த வாரம் சரிவை சந்தித்து இருப்பதால் பங்கு வெளியீட்டை தள்ளி வைப்பதே நல்லது என்று பங்குச் சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags : LL GI C. Sepi , LIC , Public Stock, SEBI, Permission, Sale
× RELATED சின்னங்கள் பொருத்தும் எந்திரங்களை மே...