×

மில்லி மீட்டராய் வளர்ந்த உலகம் மீட்டர் மீட்டராய்ச் சரியும்... போரை நிறுத்துங்கள் புதின்: வைரமுத்து

சென்னை: உக்ரைன் மீதான போரை உடனே நிறுத்த வேண்டும் என்று ரஷியா அதிபர் புதினுக்கு கவிஞர் வைரமுத்து தமது ட்விட்டர் பக்கத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார். உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யா பயங்கர ஆயுதங்களை கொண்டு நாட்டையே சர்வநாசமாக்கி வருகிறது. 14 நாட்களாக நடந்த போரில் பல இடங்களில் தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படுவதால், பதுங்கு குழிகளில் மக்கள் உயிர் பிழைக்க போராடி வருகின்றனர். பல்வேறு நகரங்களில் உணவு, குடிநீர், மருந்து இல்லாமலும் தப்பிச் செல்லவும் முடியாமலும் மக்கள் தவிக்கின்றனர். மனிதாபிமான அடிப்படையில் ரஷிய போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளதால் இந்த நகரங்களில் வசித்த 20 லட்சம் பேர் அகதிகளாக அண்டை நாடுகளான போலாந்து,ஹங்கேரி உள்ளிட்ட நாடுகளுக்கு புலம் பெயர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் கவிஞர் வைரமுத்து தமது ட்விட்டர் பக்கத்தில் யுத்தத்தை நிறுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். கவிஞர் வைரமுத்துவின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

போரை நிறுத்துங்கள் புதின்

மில்லி மீட்டராய்
வளர்ந்த உலகம்
மீட்டர் மீட்டராய்ச் சரியும்

கரும்புகை
வான் விழுங்கும்

பகலை
இருள் குடிக்கும்

கடல்கள் தீப்பிடிக்கும்

குண்டு விழாத நாடுகளிலும்
ஏழைகளின்
மண்பானை உடையும்

ஆயுதம்
மனிதனின் நாகரிகம்;
போர் அநாகரிகம்

போரை நிறுத்துங்கள் புதின்

இவ்வாறு வைரமுத்து தெரிவித்துள்ளார்.


Tags : Milly Meteroy , Diamond, Ukraine, Russia, War, Putin
× RELATED சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 87.13% மாணவ, மாணவியர் தேர்ச்சி: 56 பேர் 100/100