×

பாக்-ஆஸி. இடையே முதல் டெஸ்ட் டிரா

ராவல்பிண்டி: பாகிஸ்தான்-ஆஸ்திரேலியா அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டி  எந்த தரப்புக்கும் வெற்றித் தோல்வியின்றி டிராவில் முடிந்தது. பாக்-ஆஸி இடையிலான முதல் டெஸ்ட்  மார்ச் 4ம் தேதி ராவல்பிண்டியில் தொடங்கியது. டாஸ் வென்று களமிறங்கிய பாக் முதல் இன்னிங்சில் 4விக்கெட் இழப்புக்கு 476ரன்னுக்கு டிக்ளேர் செய்தது. அந்த அணியின்  அசார் அலி 185, இமாம் உல் ஹக் 157ரன் எடுத்தனர். அதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸி 4ம் நாள் ஆட்ட நேர முடிவில்  7 விக்கெட் இழப்புக்கு 449ரன் குவித்தது. அந்த அணியின் மார்கஸ் லபுஷேன் 90, ஸ்மித் 78,  கேமரூன் கிரீன் 48ரன் எடுத்தனர்.

களத்தில் இருந்த  மிட்செல் ஸ்டார்க் 12* கேப்டன் பேட் கம்மின்ஸ் 4*ரன்னுடன் கடைசி நாள் ஆட்டத்தை  நேற்று  தொடர்ந்தனர். கைவசம் இன்னும் 3 விக்கெட் இருந்தால்  ஆஸி இன்னும் 10 ஓவராவது விளையாடும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் கூடுதலாக 10ரன் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்களையும் பறிகொடுத்த ஆஸி 459ரன்னுக்கு ஆட்டமிழந்தது.  பாக் நவுமன் அலி 6 விக்கெட்களை அள்ளினார். அதனையடுத்து பாக் 2வது இன்னிங்சை தொடர்ந்தது. ஆட்டம் டிராவில் தான் முடியும் என்பதால் என்னவோ தொடக்க ஆட்டக்காரர்கள் அப்துல்லா சபீக், இமாம் உல் ஹக் இருவரும் பொறுமையாக விளையாடி சதம் அடித்தனர்.  

ஆஸியின் 8 வீரர்கள் மாறி, மாறி பந்து வீசியும் எந்த அதிசயமும் நிகழவில்லை. இந்த 2 இன்னிங்சிலும் சேர்த்து ஆஸி 4விக்கெட் எடுத்தது. அதனால் கடைசிநாள் ஆட்ட நேர முடிவில் அப்துல்லா 136*, இமாம் 111*ரன்னுடன் களத்தில் இருக்க 2வது இன்னிங்சில் விக்கெட் இழப்பின்றி பாக் 252ரன் எடுத்தது. கூடவே ஆட்டமும் டிராவில் முடிந்தது.  இரண்டு இன்னிங்சிலும் சதம் விளாசிய இமாம் ஆட்ட நாயகனாக தேர்வானார். இந்த 2 அணிகளுக்கும் இடையிலான 2வது டெஸ்ட் ஆட்டம்  மார்ச் 12ம் தேதி கராச்சியில் தொடங்குகிறது.


Tags : Bach ,Aussie , Bach-Aussie. First Test draw between
× RELATED மோடி அரசு தரும் நெருக்கடி:...