×

மார்ச் 11ம் தேதி முதல் ஐஎஸ்எல் செமிபைனல் ஆரம்பம்

வாஸ்கோ: ஐஎஸ்எல் கால்பந்து போட்டியின் லீக் சுற்று ஆட்டங்கள் முடிவடைந்ததையடுத்து அரையிறுதி சுற்று ஆட்டங்கள் மார்ச் 11ம் தேதி முதல் நடைபெற உள்ளன. இந்தியன் சூப்பர் லீக்(ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியின் 8வது தொடர் கோவாவில் நடக்கிறது. மொத்தம் 11 அணிகள் மோதிய இந்த தொடரின் லீக் சுற்று ஆட்டங்கள் நேற்று முன்தினத்துடன் முடிந்தன. ஒவ்வொரு அணியும் தலா 20 ஆட்டங்கள்  விளையாடியதில், முதல் 4 இடங்களை பிடித்த அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளன. அவற்றில் ஜாம்ஷெட்பூர் எப்சி 13 வெற்றி, 4 டிரா, 3 தோல்வியுடன் 43 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்தது.

ஐதராபாத் எப்சி 11 வெற்றி, 5டிரா, 4 தோல்விகளுடன் 38 புள்ளிகளை பெற்று 2வது இடமும், 3 முறை சாம்பியன் பட்டம் வென்ற ஏடிகே மோன் பகான் 10 வெற்றி, 7 டிரா, 3 தோல்வியுடன் 37 புள்ளிகளை பெற்று 3வது இடமும், கேரளா பிளாஸ்டர்ஸ் எப்சி 9வெற்றி, 7 டிரா, 4 தோல்வியுடன் 34புள்ளிகளை பெற்று 4வது இடமும் பிடித்தன. அரையிறுதிக்கு முன்னேறி உள்ள இந்த 4 அணிகளில் ஜாம்ஷெட்பூர்-கேரளா அணிகள் முதல் அரையிறுதியிலும்,  ஐதராபாத்-ஏடிகே அணிகள் 2வது அரையிறுதியிலும் விளையாட உள்ளன.

தலா 2 ஆட்டங்களை கொண்ட அரையிறுதி சுற்று மார்ச் 11ம் தேதி தொடங்குகிறது. அதன்படி முதல் அரையிறுதி முதல் சுற்றில் மார்ச் 11ம்தேதி ஜாம்ஷெட்பூர்-கேரளா அணிகளும், 2வது அரையிறுதி முதல் சுற்றில் மார்ச் 12ம் தேதி ஐதராபாத்-ஏடிகே அணிகளும் விளையாடும். அதேபோல் முதல் அரையிறுதி 2வது சுற்றில் மார்ச் 15ம் தேதி கேரளா-ஜாம்ஷெட்பூர் அணிகளும், 2வது அரையிறுதி 2வது சுற்றில் மார்ச் 16ம் தேதி ஏடிகே-ஐதராபாத் அணிகளும் மோத உள்ளன. இறுதி ஆட்டம் மார்ச் 20ம் தேதி பதோர்தாவில் நடக்கும்.

* ஜாம்ஷெட்பூருக்கு கோப்பை
லீக் சுற்றில் முதல் இடம் பிடித்த ஜாம்ஷெட்பூர் அணிக்கு டிராபியுடன்,  3.5கோடி  ரூபாய் ரொக்கப்பரிசும் வழங்கப்பட்டது. இவர்கள் இறுதிப்போட்டியில் வென்றால் மேலும் 6 கோடியும், தோற்றால் 3 கோடி ரூபாயும் கிடைக்கும். அல்லது  3, 4வது இடங்களை பிடத்ததால் 1.5 கோடி ரூபாய் கூடுதலாக கிடைக்கும்.

Tags : ISL , The first ISL semifinal starts on March 11
× RELATED மே 4ல் ஐஎஸ்எல் பைனல்: நாக் அவுட் சுற்றில் சென்னை