ரஷ்யாவுக்கு டாட்டா காட்டிய ஐபிஎம்

உக்ரைன் போர் காரணமாக பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனமான ஐபிஎம், ரஷ்யாவில் தனது அனைத்து வணிகங்களையும் நிறுத்தி வைத்துள்ளதாக அதன் தலைமை நிர்வாக அதிகாரி அரவிந்த் கிருஷ்ணா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ‘உக்ரைனில் நடக்கும் போர் தொடர்பாக பலரின் கருத்தை பெற்றோம். அதன் தொடர்ச்சியாக ரஷ்யாவில் எங்களது அனைத்து வணிகங்களையும் நிறுத்திவிட்டோம். அதிக பாதிப்புக்குள்ளான பகுதிகளுக்கு எங்களது நிறுவனம் முக்கிய ஆதரவை அளிக்கும்.

உக்ரைன் மீதான ரஷ்யப் படைகளின் ராணுவ நடவடிக்கைக்கு பல நிறுவனங்கள் தங்களது வணிகங்களை முடக்கி வைத்துள்ளன. அதன் வரிசையில் ஐபிஎம்-மும் இணைந்துள்ளது’ என்று தெரிவித்துள்ளார். உக்ரைனில் நடந்து வரும் 2 வாரம் எட்டிய நிலையில், ரஷ்யாவுக்கு எதிராக பன்னாட்டு நிறுவனங்கள், ஊடக நிறுவனங்கள் போன்றவை ரஷ்யாவை விட்டு வெளியேறி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: