×

சிவராத்திரி பிரமோற்சவத்தின் 12-வது நாளில் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்த ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர்-ஞானபிரசுனாம்பிகை

ஸ்ரீகாளஹஸ்தி : சித்தூர் மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவத்தின் 11-வது நாள் இரவு ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் சிம்மாசனத்திலும் காமதேனு வாகனத்தில் ஞானபிரசுனாம்பிகை தாயாரும் நான்கு மாட வீதிகளில் ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். நான்கு மாட வீதி நெடுகிலும் பக்தர்கள் கற்பூர ஆரத்தி சமர்ப்பித்து சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக கடந்த 24.2.2022 அன்று பக்த கண்ணப்பர் கொடியேற்றத்துடன் தொடங்கிய மகாசிவராத்திரி பிரமோற்சவம் 5.3.2022 (ஞாயிற்றுக்கிழமை) ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் கொடி இறக்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

முன்னதாக கோயில் வளாகத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர்-ஞானபிரசுனாம்பிகை தாயார் உற்சவ மூர்த்திகளுக்கு கொடி மரம் அருகில் சிறப்பு பூஜைகள் நடந்தது. அதனைத் தொடர்ந்து யாக சாலையில் கடந்த 10 நாட்களாக சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட சுவாமி அம்மையார்களின் ஆவாஹன கலசங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு யாகசாலையில் கலச உத்வியாசன(அபிஷேகம்) செய்தனர். அதனைத்தொடர்ந்து, சாஸ்திர பூர்வமாக இறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

காளஹஸ்தீஸ்வரருக்கும் ஞானபிரசுனாம்பிகை தாயாருக்கும் அலங்கார மண்டபத்தில் (உற்சவ மூர்த்திகளுக்கு )மஞ்சள், குங்குமம், சந்தனம், இளநீர், பால், தயிர், பஞ்சாமிர்தம், விபூதி போன்றவற்றுடன் சிறப்பு அபிஷேகம் நடத்தினர்.இதைத்தொடர்ந்து கோயில் வளாகத்தில் உள்ள (மூன்றாவது கோபுரம்) திருமஞ்சன கோபுரம் அருகில் உள்ள சூரிய புஷ்கரணி அருகில் திரிசூலத்தை கோயில் அர்ச்சகர்கள் வேத பண்டிதர்கள் வேத மந்திரங்களுடன் ஊர்வலமாக கொண்டு வந்தனர். அதனைத்தடர்ந்து  திரிசூலத்திற்கு சாஸ்திர பூர்வமாக அபிஷேகங்கள் நடத்தினர்.

இதில் ஸ்ரீகாளஹஸ்தி தொகுதி எம்எல்ஏ மதுசூதன் ரெட்டி தம்பதியினர், கோயில் நிர்வாக அதிகாரி பெத்தி.ராஜு தம்பதியினர் கோயில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு.தாரக.சீனிவாசுலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதனிடையே, நேற்றிரவு  மகாசிவராத்திரி பிரம்மோற்சவத்தின் பன்னிரண்டாவது நாள் இரவு பல்லக்கு சேவை வெகுவிமர்சையாக நடைபெற்றது.



Tags : Srikalahastiswarar ,Gnanaprasunambika ,Shivaratri Pramorsavam , ளKalahasti: Chittoor District Kalahasti Shiva Temple Annual Maha Shivaratri Brahmorsavam 11th Day Night
× RELATED ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் 4ம் நாள்...