×

நாமகிரிப்பேட்டையில் வெங்காயம் விலை வீழ்ச்சி-விவசாயிகள் வேதனை

நாமகிரிப்பேட்டை : நாமகிரிப்பேட்டை பகுதிக்கு உட்பட்ட கோரையாறு, மெட்டாலா, முள்ளுக்குறிச்சி, ராஜபாளையம், பிலிபாக்குட்டை, தொ.ஜேடர்பளையம், ஆர்.புதுப்பட்டி, பசுடையாம்பளையம், குல்லாண்டிகாடு உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் வெங்காயம் பயிரிடப்படுகிறது. இப்பகுதியை சுற்றிலும் ஈரப்பதமும், குளர்ச்சியும் காணப்படுவதால் வெங்காயம் சாகுபடியில் விவசாயிகள் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘ஒரு ஏக்கருக்கு சாகுபடி செய்ய விதை வெங்காயம் 1500 கிலோ தேவைப்படும். விதை வெங்காயத்தை 10 செ.மீ இடைவெளியில், பாத்திகளின் இருபுறங்களிலும் ஊன்றி தண்ணீர் பாய்ச்ச வேண்டும். பின்பு 3 நாட்கள் கழித்தும் தண்ணீர் பாய்ச்சிய பின் 5 முதல் 7 நாட்கள் இடைவெளியில் நீர் பாய்ச்சினால் போதுமானது.

சின்ன வெங்காயத்தை பொறுத்தவரை நடவுக்கு முன்பு பாத்திகளின் இருபுறமும் அடி உரமாக, ஏக்கருக்கு 30 கிலோ தழைச்சத்தும், 60 கிலோ மணிச்சத்தும், 30 கிலோ சாம்பல் சத்தும் இட வேண்டும். விதை வெங்காயம் நடவு செய்த 30 நாள் கழித்து களை எடுத்து, மேலுரமிட்டு மண் அணைத்து, நீர் பாய்ச்ச வேண்டும். ஒரு ஏக்கருக்கு வெங்காயம் சாகுபடி செய்ய ₹20 முதல் ₹30 ஆயிரம் வரை செலவாகிறது. ஆனால் தற்போது போதிய விலை கிடைக்காததால் நஷ்டம் ஏற்பட்டுள்ளது,’ என்றனர்.

Tags : Namagiripettai , Namagiripettai: Korayaru, Metala, Mullukurichi, Rajapalayam, Philipakuttai, Tho.
× RELATED நாமகிரிப்பேட்டையில் 20 லட்சம்...