குண்டர் சட்டத்தை ரத்து செய்யகோரி பப்ஜி மதன் தாக்கல் செய்த மனு மீது உத்தரவு பிறப்பிக்க ஐகோர்ட் மறுப்பு..!!

சென்னை: குண்டர் சட்டத்தை ரத்து செய்யகோரிய பப்ஜி மதனின் வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தது. இது மிகவும் ஆபத்தான விவகாரம் என்பதால் வழக்கு மேலும் சில வாரம் தள்ளிவைக்கப்படுகிறது என்று நீதிபதிகள் தெரிவித்திருக்கின்றனர். ஏற்கனவே 8 மாதங்களாக சிறையில் உள்ளதால் விடுவிக்க வேண்டும் என பப்ஜி மதன் தரப்பில் வாதிடப்பட்டது. ஆன்லைன் விளையாட்டில் சிறுவர்களிடம் ஆபாசமாக பேசியதாக தொடரப்பட்ட வழக்குகள் அடிப்படையில் மதன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

Related Stories: