சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ், ஈபிஎஸ் உள்ளிட்டோர் ஒன்றாக ஆலோசனை..!!

சென்னை: சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் ஒன்றாக ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். மார்ச் இறுதியில் கட்சியில் பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தை கூட்டுவது தொடர்பாக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, முன்னாள் அமைச்சர் வேலுமணி, ஜே.சி.டி.பிரபாகர் உள்ளிட்டோரும் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.

Related Stories: