×

பெண்கள் குரலுக்கு அடிமைத்தனத்தை தகர்த்தெறியும் வலிமை உண்டு: முதல்வர் வாழ்த்து

சென்னை: மகளிர் தின வாழ்த்து செய்தியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதாவது: ரத்த பேதம், பால் பேதம் கூடாது என்ற முழக்கத்தோடு, ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவருக்கான சமூக விடுதலைக்காகப் போராடும் இயக்கம்தான் திராவிட இயக்கம்.  மகளிர்க்கான எண்ணற்ற திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகின்றது. பெண்களுக்குச் சொத்தில் சம உரிமை, அரசு வேலைவாய்ப்புகளில் 30 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கப்பட்டு இப்போது 40 விழுக்காடாக உயர்வு.,நகர பேருந்துகளில் இலவசப் பயணம் என்று பட்டியிலிட்டுக் கொண்டே செல்லலாம். இத்திட்டங்கள் பெண்களுக்கான சமூக - பொருளாதார உரிமைகளை மீட்டளிக்கும் திட்டங்கள்.

முன்னத்தி ஏராக திராவிட முன்னேற்றக் கழகம் செயல்படுத்திய திட்டங்கள், இன்றைக்கு நாட்டுக்கே வழிகாட்டியாக அமைந்துள்ளன. சொற்களால் பெண்களைப் போற்றி செயல்களால் அவர்களை அடிமைப்படுத்திய பழமைவாத காலம் மிக வேகமாக மாறி வருகிறது. பெண்களது நலனும் உரிமையும் காக்கப்படும். மகளிர் முன்னேற்றத்திற்கு நமது ‘திராவிட மாடல் அரசு’ என்றும் துணை நிற்கும். அடிமைத்தனத்தைத் தகர்த்தெறியும் வலிமைமிகு போர்க்குரல் பெண்களே.

Tags : Women's voice has the power to break slavery: Chief Congratulations
× RELATED வேளச்சேரி – பரங்கிமலை இடையிலான...