ராயபுரம் ஆர்எஸ்ஆர்எம் மருத்துவமனையில் குழந்தைகளுக்கான அவசர சிகிச்சை பிரிவு: அமைச்சர் தொடங்கி வைத்தார்

தண்டையார்பேட்டை: ராயபுரம் அரசு ஆர்.எஸ்.ஆர்.எம் மருத்துவமனையில்  சீமோன்  என்கிற குழந்தைகளுக்கான அவசர சிகிச்சை பிரிவை, அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று திறந்து வைத்தார். தொடர்ந்து, திரவ நிலை மருத்துவ பிராணவாயு கொள்கலன் மற்றும் பச்சிளம் குழந்தைகள் நலவாழ்வு மையத்தையும் திறந்தார்.

ஏகம் அறகட்டளை, எச்.சி.எல் பவுண்டேஷன் நிதி உதவிவுடன் ₹53 லட்சம் மதிப்பில் கொரோனா தொற்று ஏற்பட்ட கர்ப்பிணி  தாய்மார்கள் பயன்பெறும் வகையில் மருத்துவ உபகரணங்கள், பிசியோதெரபி சிகிச்சை, தாய்ப்பால் குறித்த ஆலோசனை மையத்தை திறந்து வைத்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: ராயபுரம் ஆர்.எஸ்.ஆர்.எம் மருத்துவமனையில் 23 வயது பெண்ணுக்கு சிசேரியன் மற்றும் இருதய அறுவை சிகிச்சை ஒரே நேரத்தில் நடத்தப்பட்டு, தாயும், சேயும் நலமாக உள்ளனர். பெண்களுக்கு சம வாய்ப்பு அளிக்கும் கட்சி திமுக. மருத்துவர்கள் பணியிட மாற்றம் என்பது அலுவலகம் ரீதியாக நடைபெறக்கூடிய ஒரு நடவடிக்கையே தவிர்த்து மற்ற எதுவும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஐட்ரீம் மூர்த்தி, மருத்துவ கல்வி இயக்குனர் நாராயண பாபு, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், நிலைய மருத்துவ அதிகாரி ரமேஷ், இதய துறை பேராராசியர் கண்ணன், மாவட்ட செயலாளர் இளைய அருணா மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: