×

முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவி: டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ வழங்கினார்

கும்மிடிப்பூண்டி: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு ஆரம்பாக்கம், கண்ணம்பாக்கம், தோக்கமூர், பல்லவாடா, போந்தவாக்கம், மாநெல்லூர், பாதிரிவேடு, நேமள்ளூர் ஆகிய பகுதிகளில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இதில் கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றிய திமுக சார்பில் ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் மு.மணிபாலன் தலைமை வகித்தார். ஆரம்பாக்கம் பஜாரில் ஒன்றியச் செயலாளர் மு.மணிபாலன், ஊராட்சி செயலாளர் மனோகரன், துணைத் தலைவர் சிலம்பரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக பொருப்பாளரும், கும்மிடிப்பூண்டி எம்எல்ஏவுமான டி.ஜெ.கோவிந்தராஜன் பங்கேற்று கட்சி கொடியேற்றி, பொதுமக்களுக்கு புடவை மற்றும் இனிப்புகள் வழங்கினார். இதேபோல், மாநெல்லூரில் திமுக பொதுக்குழு உறுப்பினர் பா.செ.குணசேகர் ஏற்பாட்டிலும், ஊராட்சி தலைவர் லாரன்ஸ், திமுக நிர்வாகிகள் ஏசுரத்தினம், வடிவேல், தேவன்பு முன்னிலையிலும் நடைபெற்ற நிகழ்வில் டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ பள்ளி மாணவர்கள் 100 பேருக்கு கல்வி உபகரணங்களை வழங்கினார்.

தொடர்ந்து தோக்கம்மூரில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும், மாவட்ட விவசாய அணி நிர்வாகியுமான மணி ஏற்பாட்டிலும், பாதிரிவேடு பகுதியில் இளைஞரணி அமைப்பாளர் சந்திரமோகன் ஏற்பாட்டிலும், பல்லவாடாவில் மாவட்ட கவுன்சிலர்  சாரதம்மா முத்துசாமி, மாவட்ட பிரதிநிதி முத்துசாமி ஏற்பாட்டிலும், போந்தவாக்கத்தில் முன்னாள் ஊராட்சி தலைவர் ரவிச்சந்திரன், நாகராஜ், ராஜ்குமார், அமுல்ராஜ், நேமளூரில் முன்னாள் ஊராட்சி தலைவர் சேகர் ஏற்பாட்டில் 3 இடங்களில்  நடைபெற்ற நிகழ்வில் டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ பங்கேற்று கட்சி கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். பின்னர் தோக்கமூர் மற்றும் பல்லவாடாவில் அன்னதானம் வழங்கினார்.


Tags : CM ,Md. KKA Stalin ,Birthday Festival Welfare ,D.C. ,J.J. Govindarajan , Chief Minister MK Stalin's Birthday Celebration Public Welfare Assistance: DJ Govindarajan MLA
× RELATED குமரி மாவட்டத்தில் கடந்த 24 மணி...