×

தமிழக சிபிசிஐடி போலீசார் பயன்படுத்திய ஜீப், டெம்போ டிராவலர் ஏலம்

சென்னை: சிபிசிஐடி தலைமை அலுவலகம் வளாகத்தில் கழிவு செய்யப்பட்ட ஜீப் மற்றும் டெம்போ டிராவல்ஸ் ஏலம் விடப்படும் என்று குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வு துறை தலைமை அறிவித்துள்ளது.
இது குறித்து வெளியிட்ட அறிக்கை: எழும்பூர், சிபிசிஐடி தலைமை அலுவலகம் வளாகத்தில் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட ஜீப் மற்றும் டெம்போ டிராவல்ஸ் ஆகிய 10 வாகனங்கள் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவித்துள்ளபடி ஏலம் விடப்படுகிறது. மேற்கண்ட வாகனங்கள் குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வு துறை அலுவலகங்கள் அமைந்துள்ள நெல்லை, கோவை, திருச்சி, மதுரை எழும்பூர் ஆகிய இடங்களில் உள்ளன.

அவற்றை அந்நிலையிலேயே பொது ஏலம் விடப்படுகிறது என்பதால் ஏலதாரர்கள் அவ்வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் இடங்களுக்கு சென்று வாகனத்தை பார்வையிட்டு கொள்ளலாம். சென்னை தலைமை அலுவலகத்தில் நடக்கும் ஏலத்தில் கலந்து கொள்ளும் ஏலதாரர்கள், முன்னதாக முன்பணம் ரூ.2000 செலுத்தி பதிவு செய்து கொண்டு ஏலத்தில் கலந்து கொள்ளலாம்.

சென்னை தலைமை அலுவலகத்தில் நடக்கும் ஏலத்தில் கலந்து கொள்ளும் ஏலதாரர்கள், முன்னதாக முன்பணம் ரூ.2000 செலுத்தி பதிவு செய்து கொண்டு  ஏலத்தில் கலந்து கொள்ளலாம். ஏலம் எடுத்த ஏலதாரர் ஏலத்தொகை  மற்றும் அதற்கான ஜிஎஸ்டி தொகையுடன் சேர்த்து உடனடியாக செலுத்த வேண்டும். முன்பணத் தொகை ரசீது எந்த  பெயரில் பெறப்படுகிறதோ, அவரே ஏலத்தில் கலந்து கொள்ள வேண்டும் மற்றும் அவர் பெயரிலேயே வாகனத்திற்கு உண்டான உரிமை ரசீதும் வழங்கப்படும். ஏலத்தில் கலந்து கொள்பவர்கள் முகவரியுடன் கூடிய புகைப்பட அடையாள அட்டை சமர்பிக்க வேண்டும்.

மேலும் விபரங்களுக்கு காவல் ஆய்வாளர், மோட்டார் வாகனப்பிரிவு, குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வு துறை தலைமை அலுவலகத்தை நேரடியாகவோ அல்லது தொலைபேசி மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம். (9384847273) ஏலத்தில் கலந்து கொள்ளும் அனைவரும் தற்போது நடைமுறையில் உள்ள கொரோனா தடுப்பு மற்றும் அரசு வழிகாட்டுதலின்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நிச்சயம் பின்பற்ற வேண்டும், குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறையினர் தெரிவித்துள்ளனர்.


Tags : Jeep ,Tamil Nadu ,CBCID police , Jeep, Tempo Traveler auction used by Tamil Nadu CBCID police
× RELATED தமிழ்நாட்டில் ஏப். 13-ம் தேதி முதல்...