×

பூவிருந்தவல்லிக்கு திமுக நகர பொறுப்பாளர் நியமனம்

சென்னை: பூவிருந்தவல்லி திமுக நகர பொறுப்பாளராக ஜி.ஆர்.திருமலையை திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் நியமித்துள்ளார். திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் நேற்று வெளியிட்ட அறிவிப்பு:
திருவள்ளூர் மத்திய மாவட்டம் பூவிருந்தவல்லி நகர திமுக பணிகள் செவ்வனே நடைபெற, ஜி.ஆர்.திருமலை, (பூவிருந்தவல்லி, திருவள்ளூர் மாவட்டம்), பூவிருந்தவல்லி நகர திமுக பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார். ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட நகர திமுக அமைப்பின் பிற நிர்வாகிகள் அவருடன் இணைந்து பணியாற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : DMK ,Poovirunthavalli , DMK appoints city manager for Poovirunthavalli
× RELATED திமுக ஒன்றிய செயலாளரை மிரட்டிய மாஜி எம்.எல்.ஏ.,: போலீஸ் கமிஷனரிடம் புகார்