×

லியான் ஓபன் டென்னிஸ் ஸாங் ஷுவாய் அசத்தல்

லியான்: பிரான்சில் நடைபெற்ற லியான் ஓபன் மகளிர் டென்னிஸ் தொடரின் ஒற்றையர் பிரிவில், சீன வீராங்கனை ஸாங் ஷுவாய் கோப்பையை முத்தமிட்டார். பைனலில் உக்ரைனின் டயானா யாஸ்ட்ரெம்ஸ்காவுடன் (21 வயது, 103வது ரேங்க்) மோதிய ஷுவாய் (33 வயது, 41வது ரேங்க்) 3-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றியை வசப்படுத்தினார். இப்போட்டி 1 மணி, 46 நிமிடத்துக்கு நீடித்தது. ஒற்றையர் பிரிவில் ஷுவாய் கைப்பற்றும் 3வது சாம்பியன் பட்டம் இது.

Tags : Lyon Open Tennis ,Shuai Stunning , Lyon Open Tennis Song Shuai Stunning
× RELATED லியான் ஓபன் டென்னிஸ் அலிசியா சாம்பியன்: கார்சியா அதிர்ச்சி