×

ரஹ்மானின் ஸ்டுடியோவில் இளையராஜா

சென்னை: துபாயிலுள்ள ஏ.ஆர்.ரஹ்மானின் ஸ்டுடியோவுக்கு இளையராஜா வந்தார். இசை நிகழ்ச்சி நடத்துவதற்காக துபாய்க்கு சென்றுள்ளார் இளையராஜா. துபாயில் ஃபிர்தவ்ஸ் ஸ்டுடியோ என்ற பெயரில் ஏ.ஆர்.ரஹ்மான் ஸ்டுடியோ வைத்துள்ளார். சர்வதேச படங்களிலும் பணியாற்றுவதால் இங்கிருந்து பாடல் பதிவுகளை ரஹ்மான் நடத்துகிறார். இது பற்றி அறிந்த இளையராஜா, ரஹ்மானின் ஸ்டுடியோவுக்கு சென்றார். வழக்கமாக ஜிப்பா, வேட்டி அணியும் இளையராஜா, கோட் சூட்டில் ஸ்டுடியோவுக்குள் நுழைந்ததும், இசைக்கலைஞர்கள் அனைவரும் எழுந்து நின்று அவருக்கு மரியாதை கொடுத்தனர். உடனே ரஹ்மான் வந்து அவரை ஸ்டுடியோவுக்குள் அழைத்து சென்றார். இது குறித்து டிவிட்டரில் ரஹ்மான் கூறும்போது, ‘ஸ்டுடியோவுக்கான ஆர்கெஸ்ட்ரா வெளியிடுவதற்கு சிறப்பான இசைக்கோர்வை ஒன்றை மேஸ்ட்ரோ இளையராஜா அமைத்து தருவார் என நம்புகிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.அதற்கு, ‘விரைவில் இசையமைக்கிறேன்’ என இளையராஜா பதில் அளித்துள்ளார்.

Tags : Ilayaraja ,Rahman , Ilayaraja in Rahman's studio
× RELATED இளையராஜாவை மறைமுகமாக தாக்கினாரா...