மனைவியை விவாகரத்து செய்தார் இயக்குனர் பாலா

சென்னை: தனது மனைவியை இயக்குனர் பாலா விவாகரத்து செய்தார். தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க முன்னணி இயக்குனர் பாலா. சேது படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி நந்தா, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன், பரதேசி, தாரை தப்பட்டை, நாச்சியார், படங்களை இயக்கினார். கடந்த சில வருடங்களாக படம் எதுவும் இயக்காமல் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருக்கிறார். இயக்குனர் பாலா 2004ம் ஆண்டு தனது உறவுக்கார பெண்ணான முத்துமலரை திருமணம் செய்தார். இவர்கள் திருமணம் மதுரையில் நடந்தது. இந்த தம்பதிகளுக்கு பிரார்த்தனா என்ற ஒரு மகள் இருக்கிறார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கணவன், மனைவிக்கு இடையில் கருத்துவேறுபாடு ஏற்பட்டு இருவரும் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். பின்னர் பரஸ்பரம் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த நிலையில் இருவருக்கும் நீதிமன்றம் விவாகரத்து வழங்கி உள்ளது. பாலா தனது மனைவியை விவாகரத்து செய்தது தமிழ் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: