×

தாய் நாட்டில் இருந்து வெளியேறுவதை யாரும் மறக்க மாட்டார்கள் - உக்ரைனியர்கள் உருக்கம்..!

கீவ்: தாய் நாட்டில் இருந்து வெளியேறுவதை யாரும் மறக்க மாட்டார்கள் என உக்ரைனியர்கள் தெரிவித்துள்ளனர். உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் போர் 12வது நாளை எட்டியுள்ள நிலையில், கீவ், கார்கிவ், மரியுபோல், சுமி நகரங்களில் சிக்கி தவிக்கும் மக்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்காக தற்காலிக போர் நிறுத்தத்தை ரஷ்யா அறிவித்துள்ளது. இந்த 11 நாள் போரில் 15 லட்சம் மக்கள் உக்ரைனை விட்டு வெளியேறி அண்டை நாடுகளான போலந்து, ருமேனியா, சுலோவாகியா, ஹங்கேரி, மால்டோவா இன்னபிற ஐரோப்பிய நாடுகளுக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.தாய் நாட்டில் இருந்து வெளியேறுவதை யாரும் மறக்க மாட்டார்கள் என உக்ரைனியர்கள் தங்களது வலைதள பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இது தொடர்பாக இர்பின் நகரில் உள்ள ஒருவர் வெளியிட்டுள்ள பதிவில்; பச்சிளம் குழந்தை மற்றும் செல்லப்பிராணிகளுடன் மக்கள் வெளியேறும் படம் வெளியாகி உள்ளது. பலரும் தங்களது இருப்பிடங்களை காலி செய்துவிட்டு உலம்பெயர்ந்து வரும் காட்சியை பகிர்ந்துள்ள பதிவில்; உலகத்துக்கு தெரிய வரட்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இர்பின் நகரில் குண்டு வீசிய ரஷ்யாவை இன அழிப்பு செய்யும் நாசக்காரன் என்றும் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.


Tags : Ukrainians , No one will forget leaving the motherland - the Ukrainians melted
× RELATED இதுவரை 43 குழந்தைகள் உட்பட 596 உக்ரைன்...