×

சிவகார்த்திகேயன் படம் ரிலீஸ் தேதி மீண்டும் மாற்றம்

சென்னை: சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள் மோகன், எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள படம், டான். லைகா புரொடக்‌ஷன்ஸ், சிவகார்த்திகேயனின் எஸ்.கே புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளது. அனிருத்  இசை அமைத்துள்ளார். இப்படம் வரும் 25ம் தேதி தியேட்டர்களில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், திடீரென்று ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து படக்குழுவினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர், ராம் சரண், அஜய் தேவ்கன், அலியா பட், ஸ்ரேயா, சமுத்திரக்கனி நடித்துள்ள ஆர்ஆர்ஆர் படம் வரும் 25ம் தேதி திரையரங்குகளில் வெளியாவதால், டான் படத்தின் வெளியீட்டு தேதி மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, வரும் மே மாதம் 13ம் தேதி டான் படம் திரைக்கு வரும்’ என்று கூறப்பட்டு  உள்ளது.


Tags : Sivakarthikeyan , Sivakarthikeyan movie release date changed again
× RELATED குரங்கு பெடல் வெளியிடும் சிவகார்த்திகேயன்