குழந்தைகளுக்கும் விவசாயத்தை கற்றுத்தர வேண்டும்: சூர்யா

சென்னை: நடிகர் கார்த்தி நடத்தி வரும் உழவன் பவுண்டேஷன் சார்பில், 2022ம் ஆண்டுக்கான உழவர் விருதுகள் வழங்கும் விழா சென்னையில் நடந்தது. இதில் விவசாயத்தில் சாதித்தவர்களுக்கு விருதும், பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது. இதில் பங்கேற்ற சூர்யா பேசியதாவது: விவசாயத்துக்காகவும், கிராமத்துக்காகவும் நேரம் ஒதுக்காதது குற்ற உணர்வாக இருக்கிறது. பல விஷயங்களை கற்றுக்கொள்ளும் நாம், உற்பத்தி பற்றி படிப்பதில்லை. அதுபற்றி தெரிந்துகொள்வது இல்லை. எனது குழந்தைகளிடம் காய்கறிகள் கிடைக்கும் இடம் பற்றி கேட்டால், சூப்பர் மார்க்கெட் என்று சொல்கின்றனர். நமது குழந்தைகளுக்கு விவசாயம் பற்றி அறிமுகம் செய்து வைக்க வேண்டும். அவர்கள்தான் இதை அடுத்தகட்டத்துக்கு எடுத்துக்கொண்டு செல்வார்கள். அருகில் உள்ளவர்களிடம் பொருட்களை வாங்க முயற்சிப்போம். நாம் பொருள் வாங்கும்போது, அதில் விவசாயிகளுக்கு எவ்வளவு பணம் கிடைக்கிறது என்று தெரிந்துகொள்ள வேண்டும். விவசாயிகள் பெரிதாக சம்பாதிக்கவில்லை. அவர்கள் சம்பாதிக்கும் பணத்தை மீண்டும் விவசாயத்துக்குத்தான் பயன்படுத்துகிறார்கள். இவ்வாறு பேசினார்.

Related Stories: